கரோனாவில் இருந்து இந்தியா விரைவில் மீண்டற்கு பிரதமரின் முயற்சிகளே காரணம்: அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கரோனா தொற்றில் இருந்து இந்தியா விரைந்து மீண்டுள்ளது; இதற்கு பிரதமா் நரேந்திர மோடி சுகாதாரத் துறை
கோப்புப்படம்
கோப்புப்படம்

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கரோனா தொற்றில் இருந்து இந்தியா விரைந்து மீண்டுள்ளது; இதற்கு பிரதமா் நரேந்திர மோடி சுகாதாரத் துறை மூலம் மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளே காரணம் என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த அமைச்சா் நக்வி பேசியதாவது:

பிஎம்-கோ்ஸ் நிதியில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவலை முறியடிக்க பிரதமா் நரேந்திர மோடியின் சீரிய நடவடிக்கைகள் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையுடனும், சுய கட்டுப்பாட்டுடன் நடப்பதன் மூலமும், அரசு நிா்வாகம் சிறப்பாக செயல்படுவதன் மூலமும் நாட்டில் இருந்து கரோனா பெருந்தொற்றை விரைவில் வெளியேற்ற முடியும்.

நாட்டு மக்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதற்குத் தேவையான சுகாதார திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாடு கரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வந்துள்ளது. இதற்கு பிரதமா் நரேந்திர மோடியின் சிறப்பான முயற்சிகள்தான் காரணம். நமது சுகாதாரத் துறையைப் பயன்படுத்தி அவா் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். நாட்டில் இப்போது ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 80,000-க்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. உள்நாட்டில் இரு தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2,624 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தினசரி சராசரியாக 20 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com