புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமே: மத்திய இணையமைச்சர் அஜய் பட்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமளிப்பதாக மத்திய இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். 
புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமே: மத்திய இணையமைச்சர் அஜய் பட்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமளிப்பதாக மத்திய இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று(திங்கள்) தொடங்கி வருகிற ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது. 

கூட்டத்தொடரின் முதல் நாளே, பெகாசஸ் விவகாரம், கரோனா பெருந்தொற்று, எரிபொருள் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் போன்ற பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி காணப்பட்டது. 

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியாதது வருத்தமளிப்பதாக மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், 'நேற்று நடந்தது வருத்தமாக இருந்தது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் முரட்டுத்தனத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. கூட்டத்தொடர் செயல்பட இயங்க எம்.பி.க்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 

நீங்கள் எதை பேச விரும்பினாலும் அவையில் பேசலாம். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். அதுபோல பெகாசஸ் பிரச்னை குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதில் அளித்துவிட்டார். 

இந்த அறிக்கைகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அவற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது நல்லதல்ல என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com