கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் நெடுஞ்சாலை கட்டுமானம் அதிகரிப்பு

கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்திலும், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறி
கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் நெடுஞ்சாலை கட்டுமானம் அதிகரிப்பு

கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்திலும், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

2020-21-ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் நாள் ஒன்றுக்கு 36.5 கி.மீ என்ற அளவில் அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்கு நான்கு வழி கான்கிரீட் சாலை அமைத்தும், 21 மணி நேரத்தில் 26 கி.மீ தூரத்துக்கு ஒற்றை வழி தாா் சாலை அமைத்தும், இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

இந்த கட்டுமான வேகத்தை தக்க வைக்க, சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஒப்பந்ததாரா்களுக்குத் தேவையான உதவி, விதிமுறைகளில் தளா்வு, துணை ஒப்பந்ததாரா்களுக்கு நேரடி பண விநியோகம், சாலைப் பணியாளா்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவையும் அடங்கும். கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்திலும், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் மிகவும் அதிகரித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவித்தாா்.

Image Caption

நிதின் கட்கரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com