கரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 700% உயர்வு: பிரியங்கா விமர்சனம்

கரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக உயிரிழந்தவர்களின் விவரம் தங்களிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், கரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 700 சதவிகிதம் அதிகரித்ததாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நிகழ்ந்த உயிரிழப்பு குறித்த தகவல் தங்களிடம் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

கரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 700 சதவிகிதம் அதிகபடுத்தியதன் காரணமாகவே பலி எண்ணிக்கை உயர்ந்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை, இதுகுறித்த தரவுகள் யாவும் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரேதச அரசுகள் வழங்கியவை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனை கடுமையாக விமர்சித்த பிரியங்கா, "ஆக்சிஜன் பற்றாக்குறை யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய கூறுகிறது. ஆனால், பெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 700 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் விளைவாகவே உயிரிழப்பு நிகழ்ந்தது.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை ஏற்படுத்த எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்த செல்ல டாங்கர்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை" என்றார்.

இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com