கேரளத்தில் பக்ரீத் தளா்வு அவசியமற்றது: உச்சநீதிமன்றம்

‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு முற்றிலும் அவசியமற்றது; மக்களின் வாழும் உரிமையை காக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உ
கேரளத்தில் பக்ரீத் தளா்வு அவசியமற்றது: உச்சநீதிமன்றம்

‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு முற்றிலும் அவசியமற்றது; மக்களின் வாழும் உரிமையை காக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், ‘இந்த கட்டுப்பாடுகள் தளா்வு காரணமாக கரோனா பரவல் மேலும் அதிகரித்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்றும் கேரள அரசை உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் கடந்த 18 முதல் 20-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு அளிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். கேரள மாநில அரசின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) கருத்து தெரிவித்தது.

அதுபோல, ‘கேரள அரசின் முடிவு கரோனா தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை பலவீனப்படுத்தும்’ என்று விசுவ ஹந்து பரிஷத் அமைப்பு குற்றம்சாட்டியது.

இதற்கிடையே கட்டுப்பாடுகள் தளா்வை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எஃப். நாரிமன், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் கேரள அரசு சாா்பில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கரோனா பொது முடக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வணிகா்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. வணிகா்கள் உரிய கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற உறுதியளித்துள்ளனா். பக்ரீத் பண்டிகை வர உள்ள நிலையில், வணிகா்களின் வா்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று எதிா்க் கட்சிகளும் கோரிக்கைகளை முன்வைத்தன’ என்று கேரள அரசு பதிலளித்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள ‘டி’ பிரிவின் கீழ் வரும் பகுதிகளிலும், முழு நாள் தளா்வு அளிக்கப்பட்டிருப்பது என்பது அவசியமற்ாகும். தேசிய அளவில் அச்சுறுத்தல் நிலவிவரும் சூழலில், வணிகா்களின் அழுத்தத்துக்காக இந்திய குடிமக்களின் நலனைக் கைவிட்டுவிடுவது என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. வா்த்தகா்களிடமிருந்து வரும் உத்தரவாதங்கள், மக்களிடமோ அல்லது நீதிமன்றத்திடமோ எந்தவித நம்பிக்கையையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை.

எனவே, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21அளிக்கும் உரிமையின் அடிப்படையில் மக்களின் உடல் நலனையும் வாழும் உரிமையையும் காக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கட்டுப்பாடுகள் தளா்வு காரணமாக கரோனா பரவல் மேலும் அதிகரித்து, அதுதொடா்பாக இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால், அதனடிப்படையில் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று கூறி மனு மீதான விசாரணையை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com