வேளாண் சட்டங்கள்: ஜந்தர் மந்தரில் திரண்ட விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி திரண்டு வருகின்றனர்.
ஜந்தர் மந்தரில் திரண்ட விவசாயிகள்
ஜந்தர் மந்தரில் திரண்ட விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தர் நோக்கி திரண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணி நடத்தப்படும் எனவும் நாள்தோறும் 200 விவசாயிகள் தில்லி நோக்கி செல்வார்கள் எனவும் விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதனால், தில்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி அளித்ததையடுத்து ஜந்தர் மந்தர் நோக்கி விவசாயிகள் சென்று கொண்டுள்ளனர்.

தில்லியில் உள்ள அனைத்து எல்லைகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த குடியரசு தினத்தன்று நடைபெற்றது போல வன்முறை நடைபெறாமல் இருக்க தில்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தீவிர சோதனைக்கு பிறகே தில்லிக்குள் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com