கேரளத்தில் கனமழை எதிரொலி : மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கேரளத்தின்  அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கேரளாவில் கனமழை எதிரொலி : மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
கேரளாவில் கனமழை எதிரொலி : மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கேரளத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம், இடுக்கி , கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் தொடர்ந்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை அளித்திருக்கிறார்கள்.


மேலும் 50 -60 கி.மீ வேகத்தில் காற்றானது  கேரளக் கடற்கரை கடக்க இருப்பதால் ஜுலை 26 ஆம் தேதி வரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

நேற்று கண்ணூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* தொடர்ந்து 24 மணி நேரம் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்தால் சிவப்பு எச்சிரிக்கை    
* 6 - 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்தால் ஆரஞ்சு எச்சரிக்கை 
* 6 - 11 சென்டி மீட்டர்க்கு மஞ்சள் எச்சரிக்கை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com