கோவாவில் ஒரு லட்சம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போடவில்லை: முதல்வர்

மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான 15 லட்சத்தில் இன்னும் ஒரு லட்சம் பேர் மட்டுமே முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருப்பதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான 15 லட்சத்தில் இன்னும் ஒரு லட்சம் பேர் மட்டுமே முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருப்பதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் நேரடியாக மக்கள் இருக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், 'ஜூலை 31 க்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி முடிக்கபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தடுப்பூசி மையங்களில் முதல் தவணை தடுப்பூசியை அனைவரும் எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். ஒரு லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்கள் முன்வந்தால் எங்கள் இலக்கை நிறைவு செய்வோம். ஜூலை 31க்கும் தடுப்பூசி போடாதவர்கள் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

ஆசிரியர்களுக்கு விரைவாக தடுப்பூசி போட அனுமதிக்குமாறு நாங்கள் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். அனுமதி வழங்கப்பட்டால், நாங்கள் 30 நாள்களுக்குள் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்வோம். ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். எனினும், மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்க இன்னும் முடிவு எடுக்கவில்லை. 

ஆனால் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் பள்ளிகளுக்கு வரவழைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com