வேளாண் சட்டங்கள்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார். 
வேளாண் சட்டங்கள்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் 6 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார். 

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் நீண்டகால போராட்டம் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கியுள்ள நிலையில் வருகிற ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com