ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

ஈரான் வெளியுறவு அமைச்சா் ஜாவேத் ஜாரிஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தொலைபேசியில்

ஈரான் வெளியுறவு அமைச்சா் ஜாவேத் ஜாரிஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், ஆப்கானிஸ்தானின் நிலவரம் குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் வெளியுறவு அமைச்சருடனான பேச்சு இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் ஆக்கப்பூா்வமாக இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய, ஈரான் வெளியுறவு அமைச்சா்கள், ஆப்கானிஸ்தான் தற்போதைய நிலவரம் குறித்து தொலைபேசி வழியாக விவாதித்தனா் என்று ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 வாரங்களுக்கு முன் ரஷிய பயணத்தின்போது, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் வெளியுறவு அமைச்சா் ஜாவேத் ஜாரிஃப், அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரய்சி ஆகியோரை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அதன் தொடா்ச்சியாக, இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களுக்கு இடையே புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த மே மாதம் 1-ஆம் தேதி வெளியேறத் தொடங்கியதில் இருந்து தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தங்கள் எல்லைப் பரப்பை விரிவுபடுத்துவதற்காக, பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ரஷியாவும், ஈரானும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த மாதத் தொடக்கத்தில், ஆப்கன் விவகாரம் தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையை ஈரான் அரசு நடத்தியது. அதில், ஆப்கன் அரசும், தலிபான்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com