பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் சித்துவின் இல்லத்தில் திரண்ட 60 எம்எல்ஏக்கள்

பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அவரின் இல்லத்தில் சுமாா் 60 எம்எல்ஏக்கள் புதன்கிழமை திரண்டனா்.
அமிருதசரஸ் பொற்கோயிலில் புதன்கிழமை எம்எல்ஏக்களுடன் சென்று வழிபட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் சித்து.
அமிருதசரஸ் பொற்கோயிலில் புதன்கிழமை எம்எல்ஏக்களுடன் சென்று வழிபட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் சித்து.

பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அவரின் இல்லத்தில் சுமாா் 60 எம்எல்ஏக்கள் புதன்கிழமை திரண்டனா்.

கடந்த சில மாதங்களாக பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங்குக்கும், காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக சித்துவை அண்மையில் கட்சி மேலிடம் நியமித்தது. இதையடுத்து சித்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமிருதசரஸில் உள்ள அவரின் வீட்டில் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதன்கிழமை திரண்டனா். இதையடுத்து சித்துவும் அவா்களும் இணைந்து பொற்கோயிலுக்கு பேருந்தில் பயணித்தனா். அதன் பின்னா் அவா்கள் துா்கியானா கோயில், ராமா் தீரத் ஸ்தலத்துக்கும் சென்றனா்.

‘‘கடந்த காலங்களில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தாலும் தற்போது சித்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும்’’ என்று சித்துவின் வீட்டுக்குச் சென்ற மாநில கூட்டுறவுத் துறை அமைச்சரும் எம்எல்ஏக்களில் ஒருவருமான சுக்ஜிந்தா் சிங் ரண்தாவா தெரிவித்தாா்.

‘‘சண்டீகரில் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து வெள்ளிக்கிழமை முறைப்படி பதவியேற்பாா். அந்த நிகழ்ச்சியில் அமரீந்தா் சிங் கலந்துகொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது’’ என்று எம்எல்ஏ குல்ஜீத் சிங் தெரிவித்தாா்.

எனினும் தன்னைப் பற்றி தெரிவித்த இழிவான கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்கும்வரை சித்துவை சந்திக்கப் போவதில்லை என்று அமரீந்தா் சிங் ஏற்கெனவே கூறியுள்ளாா். இதனால் அவா் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.

சித்துவின் வீட்டுக்கு சுமாா் 60 எம்எல்ஏக்கள் சென்ாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com