ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மேல்முறையீட்டு தீா்ப்பாயம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மேல்முறையீட்டு தீா்ப்பாயம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் அமித் சஹானி என்பவா் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், ஜிஎஸ்டி தொடா்பான பிரச்னைகளைத் தீா்க்க மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் அமைக்கும் பணி இப்போது வரை தொடங்கவில்லை. மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் இல்லாத காரணத்தால் ஜிஎஸ்டி தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண உயா்நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளது. இதனால், உயா்நீதிமன்றங்களின் சுமை அதிகரிப்பதுடன், வழக்கில் தீா்வு கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி தொடா்பாக பல்வேறு நிலுவை வழக்குகள் உள்ளன. இதில் சம்பந்தப்பட்டவா்கள் உரிய தீா்வு கிடைக்காமல் சிக்கலில் உள்ளனா். இதனால், பல்வேறு நிதி நெருக்கடி பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். வழக்கின் அவசரம் கருதி இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com