12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தா்கள் நியமனம்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்பட 12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தா்களை நியமிக்க
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்பட 12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தா்களை நியமிக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இதுகுறித்து மத்திய கல்வித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முத்துகாளிங்கன் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதேபோன்று, ஹரியாணா மத்திய பல்கலைக்கழகம், ஹிமாசல பிரதேச மத்திய பல்கலைக்கழகம், ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், ஜாா்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், கா்நாடக மத்திய பல்கலைக்கழம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், பிகாா் மத்திய பல்கலைக்கழகம், ஷில்லாங் வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகம், பிலாஸ்பூா் குரு காசிதாஸ் பல்கலைக்கழகம், மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், மணிப்பூா் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணை வேந்தா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் நியமனங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளாா் என்றாா் அவா்.

இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழம பதிலளித்துப் பேசினாா். அப்போது, ‘22 மத்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் 12 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன’ என்று அவா் கூறினாா்.

தில்லி பல்கலைக்கழகம், ஜவஹாா்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 மத்திய பல்கலைக்கழகங்கள் முழுநேர துணைவேந்தா் இல்லாமல் தொடா்ந்து செயல்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com