மூத்த ஐஏஎஸ் அலுவலர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

துப்பாக்கிகளுக்கு சட்ட விரோதமாக உரிமம் வழங்கிய விவகாரத்தில், மூத்த ஐஏஎஸ் அலுவலர் ஷாஹிப் இக்பால் சவுத்ரி வீட்டில் சிபிஐ அதிரடி சோசனை நடத்திவருகின்றனர்.
சிபிஐ
சிபிஐ

துப்பாக்கிகளுக்கு சட்ட விரோதமாக உரிமம் வழங்கிய விவகாரத்தில், மூத்த ஐஏஎஸ் அலுவலர் ஷாஹிப் இக்பால் சவுத்ரி வீட்டில் சிபிஐ அதிரடி சோசனை நடத்திவருகின்றனர்.

மூத்த ஐஏஎஸ் அலுவலர் ஷாஹித் இக்பால் சவுத்ரி வீடு உள்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள 22 இடங்களில் சிபிஐ இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தினர்.

தற்போது, ஜம்மு காஷ்மீர் பழங்குடியின  விவகாரத்துறையின் செயலாளராக உள்ள சவுத்ரி, கத்துவா, ரியசி, ரஜௌரி, உத்தம்பூர் ஆகிய நகரங்களின் துணை ஆணையராக இருந்தபோது போலி நபர்களின் பெயரில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, எட்டு துணை ஆணையர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 2012ஆம் ஆண்டு முதல், ஜம்மு காஷ்மீரில் இரண்டு லட்சம் துப்பாக்கிகளுக்கு சட்ட விரோதமாக உரிமம் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு, ராஜீவ் ரஞ்சன் உள்பட இரண்டு ஐஏஎஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். ரஞ்சன், ஹுசைன் ரஃபிகி ஆகியோர் குப்வாரா மாவட்டத்தின் துணை ஆணையராக பதவி வகித்தபோது, துப்பாக்கிகளுக்கு சட்ட விரோதமாக உரிமம் வழங்கினர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம், குற்றம்சாட்டப்பட்டவர்களுடனும் ஐஏஎஸ் அலுவலர்களுடனும் பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். இதற்கு பின், பெரிய கூட்டு சதி இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com