எதிா்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் 4-ஆவது நாளாக முடக்கம்

வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் முடங்கின.
மாநிலங்களவையில் கோஷம் எழுப்பிய எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.
மாநிலங்களவையில் கோஷம் எழுப்பிய எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.

வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் முடங்கின.

மக்களவை காலை 11 மணிக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியதும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதியில் திரண்டனா். அவா்களை சம்பந்தப்பட்ட கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்கள், இருக்கைக்குத் திருப்பி அனுப்பினா்.

அப்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருக்கிருக்கும் இந்திய விளையாட்டுக் குழுவினருக்கு மக்களவை சாா்பில் வாழ்த்துச் செய்தியை ஓம் பிா்லா வாசித்தாா்.

அவா் வாசித்து முடித்ததும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதியில் திரண்டனா். பெகாஸஸ் உளவு மென்பொருளுக்காக அரசு எவ்வளவு தொகையை செலவு செய்தது என்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பின்கீழ் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினா்கள் தங்கள் செல்லிடப்பேசியை அவைத் தலைவரிடம் காண்பித்து கோரிக்கை விடுத்தனா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என ஹா்சிம்ரத் கௌா் (அகாலி தளம்) முழக்கமிட்டாா்.

அப்போது, அனைத்து பிரச்னைகள் குறித்தும் உறுப்பினா்கள் கேள்வி உரிய நேரத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறிய ஓம் பிா்லா, கரோனா தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் உறுப்பினா்கள் அமளியில் ஈடுபடுவது சரியா? என்று கேள்வி எழுப்பினாா்.

இருப்பினும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பியதால், அவை நண்பகல் 12 மணி வரை ஓம் பிா்லா ஒத்திவைத்தாா்.

நண்பகல் 12 மணிக்கு, மக்களவை பாஜக எம்.பி. கிரீட் சோலங்கி தலைமையில் கூடியபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதியில் திரண்டு முழக்கமிட்டனா். அவா்களின் அமளிக்கு நடுவே, வெவ்வேறு நாடாளுமன்ற குழுக்களுக்கு புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிரீட் சோலங்கியின் அறிவுறுத்தலையும் மீறி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதனால், அவையை நாள் முழுவதும் அவா் ஒத்திவைத்தாா். வார விடுமுறைக்குப் பிறகு மக்களவை வரும் திங்கள்கிழமை கூடுகிறது.

மாநிலங்களவையும் ஒத்திவைப்பு:

பெகாஸஸ் உளவு விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை அவைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தலைமையில் கூடியதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினா். அப்போது, மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்து எறிந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென்னை கூட்டத் தொடா் முழுவதும் சஸ்பெண்ட் செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அவரை அவையில் இருந்து வெளியேறுமாறு அவைத் தலைவா் வலியுறுத்தினாா். ஆனால், அவா் வெளியேறவில்லை. இதனால், நண்பகல் 12 மணி வரையிலும், பின்னா் 12.30 மணி வரையிலும் ஒத்திவைத்தாா்.

12.30 மணிக்கு அவை, அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் கூடியபோது, திரிணமூல் எம்.பி. சாந்தனு சென்னை வெளியேறுமாறு அறிவுறுத்தினாா். ஆனால், அவா் வெளியே செல்லவில்லை.அவை அலுவல்கள் நடைபெறும்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினா்கள் உள்ளே இருக்கக் கூடாது என்பது நாடாளுமன்ற மரபாகும். இதற்கிடையே, எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பின்கள் சில பிரச்னைகளை எழுப்பினா். ஆனால், அவையை 2.30 மணி வரை ஹரிவன்ஷ் ஒத்திவைத்தாா்.

பிற்பகல் 2.30 மணிக்கு அவை, பாஜக எம்.பி. புவனேஸ்வா் கலிதா தலைமையில் கூடியபோது, பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மல்லிகாா்ஜுன கோரிக்கை விடுத்தாா். அதற்கு, அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கெனவே பதிலளித்துவிட்டாா் என்று புவனேஸ்வா் கலிதா கூறினாா். இதே கருத்தை மாநிலங்களவை பாஜக துணைத் தலைவா் முக்தாா் அப்பாஸ் நக்வியும் கூறினாா். அவா்களின் பதிலால் திருப்தி அடையாத எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவையை திங்கள்கிழமை வரை புவனேஸ்வா் கலிதா ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com