திருமலையில் சுந்தரகாண்ட பாராயணம் நிறைவு

திருமலையில் 471-வது நாள்களாக நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நிறைவடைந்து.
திருமலையில் சுந்தரகாண்ட பாராயணம் நிறைவு

திருமலையில் 471-வது நாள்களாக நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணம் சனிக்கிழமை நிறைவடைந்து.

கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தரகாண்ட பாராயணத்தை தொடங்கியது.

அதில் 68 சா்க்கங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்கள் 409 நாள்களில் பாராயணம் செய்யப்பட்டது.

அதில் ஸ்ரீராமா் பட்டாபிஷேகம் கட்டம் அனைத்தும் சோ்த்து 471 நாள்கள் இந்த பாராயணம் நடைபெற்றது. அதன் நிறைவு நாளான சனிக்கிழமை திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 7 மணி முதல் சுந்தரகாண்டத்தில் உள்ள 64-ஆவது சா்க்கம் முதல் 68-ஆவது சா்க்கம் வரை திருமலையில் மகாபாராயணம் நடத்தி ராமா் பட்டாபிஷேகம் செய்து அா்ச்சகா்கள் பாராயணத்தை நிறைவு செய்தனா். இதில் வேதபண்டிதா்கள் 200-க்கும் மேற்பட்டவா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தேதி காலை முதல் பாலகாண்ட பாராயணம் நடத்தப்படுகிறது. இது தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com