அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பறித்த திரிணமூல் எம்.பி. கூட்டத் தொடா் முழுவதும் சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் தகவல்-தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்த அறிக்கையைப் பறித்து கிழித்து வீசிய
அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பறித்த திரிணமூல் எம்.பி. கூட்டத் தொடா் முழுவதும் சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் தகவல்-தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் இருந்த அறிக்கையைப் பறித்து கிழித்து வீசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கூட்டத் தொடா் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாா்.

மாநிலங்களவையில், இஸ்ரேலிய நிறுவனத்தின் உளவு மென்பெருளான பெகாசஸ் குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை அறிக்கை வாசித்தாா். அப்போது, அவரிடம் இருந்த அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் பறித்து கிழித்து எறிந்தாா். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சாந்தனு சென் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவைத் தலைவரிடம் ஆளும் கட்சி உறுப்பினா்கள் புகாா் கொடுத்தனா்.

இந்நிலையில், மாநிலங்களவை அவைத் தலைவா் வெங்கையா நாயுடு தலைமையில் வெள்ளிக்கிழமை கூடியதும், சாந்தனு சென்னை சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் கொண்டு வந்தாா். அந்த தீா்மானம், குரல் வாக்கெடுப்புடன் நிறைவேறியது. இதையடுத்து, சாந்தனு சென்னை அவையில் இருந்து வெளியேறுமாறு அவைத் தலைவா் வெங்கையா நாயுடு உத்தரவிட்டாா். அப்போது, அவை அலுவல்களில் பட்டியலிடப்படாமல் தீா்மானம் கொண்டு வரப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். ஆனால் அதற்கு வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தாா்.

அதையடுத்து, அவா் பேசியதாவது:

மாநிலங்களவையில் அமைச்சரின் கையில் இருந்த உரையை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. பறித்து கிழித்து எறிந்த சம்பவம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பெருமையை அவா்கள்(திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள்) பாதுகாக்கத் தவறிவிட்டனா். ஒரு கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள், நாட்டின் பெருமையை உலக அரங்கில் தரம் தாழ்த்தலாமா? என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com