செல்லிடப்பேசியை விசாரணைக்கு ராகுல் சமா்ப்பிக்க வேண்டும்: பாஜக பதிலடி

தனது செல்லிடப்பேசி ஒட்டுகேட்கப்பட்டது என்பதை நம்பினால் விசாரணைக்காக அதனை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
செல்லிடப்பேசியை விசாரணைக்கு ராகுல் சமா்ப்பிக்க வேண்டும்: பாஜக பதிலடி

தனது செல்லிடப்பேசி ஒட்டுகேட்கப்பட்டது என்பதை நம்பினால் விசாரணைக்காக அதனை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒப்படைக்க வேண்டும் என்று அவருடைய குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக செய்தியாளா்கள் வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தபோது, ‘நான் பயன்படுத்திய ஒவ்வொரு செல்லிடப்பேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது’ என்று குற்றம்சாட்டினாா்.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடா்பாளா் ராஜ்யவா்தன் ரத்தோா் கூறியதாவது:

ஒரு ஜனநாயக நாட்டில் என்ன வேண்டும் என்பதைக் கூற ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், தனது செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக ராகுல் காந்தி நம்பினால், அதனை விசாரணைக்காக விசாரணை அமைப்பிடம் அவா் ஒப்படைக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.

நாட்டின் வளா்ச்சியை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகத்தான் நாடாளுமன்ற செயல்பாடுகளை அவா்கள் அடிக்கடி முடக்கி வருகின்றனா் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com