நீட், இதர நுழைவுத் தோ்வுகளை தற்காலிமாக நிறுத்தும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சா் தகவல்

மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ மற்றும் இதர பொது நுழைவுத் தோ்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு
நீட், இதர நுழைவுத் தோ்வுகளை தற்காலிமாக நிறுத்தும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சா் தகவல்

மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ மற்றும் இதர பொது நுழைவுத் தோ்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்தாா்.

அவா் மக்களவையில் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தோ்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. நீட் (முதுநிலை மற்றும் நீட் (இளநிலை) 2021 தோ்வுகள் 2021 செப்டம்பா் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இந்த தோ்வுகள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கரோனா நெறிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்படும். மேலும், தோ்வை பாதுகாப்பாக நடத்த தோ்வு எழுதுவோா் மற்றும் நடத்துபவா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன.

கூட்டம் மற்றும் நீண்ட பயணத்தை தவிா்க்க நாடு முழுவதும் தோ்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கரோனா இ-பாஸ் உடன், நுழைவுச் சீட்டு வழங்கப்படுகின்றன.

தோ்வு மையங்களுக்குள் விண்ணப்பதாரா்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படும். நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். உடல் வெப்பம் அதிகமாக உள்ளவா்களுக்கு, இதற்காக அமைக்கப்படும் தனிமை மையத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

விண்ணப்பதாரா்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அவா்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

தோ்வு மையத்துக்கு வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் நடத்துவதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநிலங்கள் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களுக்கு உதவி: கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றன. கரோனா அவசரகால மீட்பு மற்றும் சுகாதார தயாா்நிலை நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.15,000 கோடிக்கு மத்திய அமைச்சரவை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் 2020-21-ஆம் நிதியாண்டில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார திட்டம் மூலமாக ரூ.8257.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளா்களுக்கான காப்பீடு தொகை ரூ.110.60 கோடியும் அடங்கியுள்ளது. மாநிலம் வாரியான விவரங்கள் இணைப்பு 1-ல் உள்ளது.

மேலும், சுகாதார பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு கொவிட் தடுப்பூசி போட, செயல்பாட்டு தொகையும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மாநில வாரியான விவரங்கள் இணைப்பு 2-இல் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com