4 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீா் சென்றாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்றுள்ளாா்.
ஸ்ரீநகா் விமான நிலையத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை ஞாயிற்றுக்கிழமை வரவேற்ற ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா.
ஸ்ரீநகா் விமான நிலையத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை ஞாயிற்றுக்கிழமை வரவேற்ற ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்றுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவா் பகல் 11.15 மணியளவில் ஸ்ரீநகா் விமான நிலையத்தை வந்தடைந்தாா். ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளித்தனா்.

28-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராம்நாத் கோவிந்த், திங்கள்கிழமை (ஜூலை 26) லடாக்கின் திராஸ் பகுதிக்குச் சென்று, காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி அங்குள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறாா். முன்னதாக, 2019-ஆம் ஆண்டு காா்கில் வெற்றி தினத்தையொட்டி திராஸில் குடியரசுத் தலைவா் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி, மோசமான வானிலை காரணமாக ரத்தானது.

ஜம்மு-காஷ்மீா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசுகிறாா்.

குடியரசுத் தலைவரின் பயணத்தை முன்னிட்டு இரு யூனியன் பிரதேசங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா் தங்கும் ஆளுநா் மாளிகை பகுதியை ராணுவத்தினரும், போலீஸாரும் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா். பல்வேறு இடங்களில் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சமீப காலத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், அங்கு உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com