ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வில் மகாராஷ்டிர மாணவா்களுக்கு கூடுதல் வாய்ப்பு

 மகாராஷ்டிரத்தில் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வை எழுத கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.
ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வில் மகாராஷ்டிர மாணவா்களுக்கு கூடுதல் வாய்ப்பு

 மகாராஷ்டிரத்தில் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வை எழுத கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்வதற்கான ஜேஇஇ-மெயின்ஸ் நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்தி வருகிறது. அத்தோ்வின் 3-ஆம் கட்டமானது ஜூலை 20, 22, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மகாராஷ்டிரத்தில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பாங்கான பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் ஜூலை 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தோ்வில் பங்கேற்க முடியாத ரத்னகிரி, ராய்கட், சிந்துதுா்க், பால்கா், கொல்ஹாபூா், சங்லி, சதாரா ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தோ்வு முகமை சனிக்கிழமை அறிவித்தது. அவா்களுக்குத் தோ்வு நடத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முகமை தெரிவித்துள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்பால் ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வை எழுத முடியாத மாணவா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குமாறு தேசிய தோ்வு முகமைக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்திருந்தாா். அதை ஏற்று தோ்வு முகமை கூடுதல் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com