உச்ச நீதிமன்ற நிலுவை வழக்குகள் அதிகரிப்பு

உச்ச நீதிமன்றத்தில் 68,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உச்ச நீதிமன்ற நிலுவை வழக்குகள் அதிகரிப்பு

உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 68,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, இந்தாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் 1.7 சதவிகிதம் அதிகரித்த நிலையில், 2020ஆம் ஆண்டு, இது 1.4 சதவிகிதமாகவும் 2021ஆம் ஆண்டு, 4.3 சதவிகிதமாகவும் உயர்ந்தது. சாதாரண காலத்தை காட்டிலும், கரோனா கட்டுபாடு விதிக்கப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றம் அதிக நேரம் செயல்பட்டுள்ளது.

இருப்பினும், வரலாறு காணாத அளவில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரித்துள்ளது. நீதிமன்ற விசாரணை நேரடியாக நடைபெறாமல் இணையத்தில் நடைபெற்ற காரணத்தால் இது நிகழ்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு, 822 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது, 2020ஆம் 1,024ஆகவும் 2021ஆம் ஆண்டு 2,811ஆகவும் உயர்ந்தது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருப்பதால், நிலுவையில் உள்ள வழக்குகள் மேலும் அதிகரிக்க உள்ளது. தற்போது, 27 நீதிபதிகளே பணியில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, மேலும் இரண்டு நீதிபதிகள் இந்தாண்டும் மூன்று நீதிபதிகள் அடுத்தாண்டும் ஓய்வு பெறவுள்ளனர். 1950களை காட்டிலும் நீதிபதிகள் நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் நிலையிலும் இந்த சிக்கல் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com