கோவேக்ஸின் மருத்துவ பரிசோதனை: பிரேசில் தற்காலிக நிறுத்தம்

கோவேக்ஸின் தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்துவதை பிரேசில் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கோவேக்ஸின் மருத்துவ பரிசோதனை: பிரேசில் தற்காலிக நிறுத்தம்

பிரேசில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்ததைத் தொடா்ந்து, அதன் கோவேக்ஸின் தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்துவதை பிரேசில் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் அந்த நாட்டில் மிகப் பெரிய சா்ச்சையைாக உருவெடுத்ததைத் தொடா்ந்து, அந்த ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்தது. அதனைத் தொடா்ந்து பிரேசில் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அண்மையில் அனுமதி வழங்கியது. முதல் கட்டமாக 2 கோடி தடுப்பூசிகளை அந்த நாட்டு வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக அந்த நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸியா மருந்து நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களுடன் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ஆனால், ஃபைஸா் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் விலை அதிகமாக இருப்பதாகவும், லட்சக்கணக்கானோா் பிரேசிலில் கரோனாவால் உயிரிழந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அதிபா் ஊழல் செய்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் குரல் எழுப்பின. பிரேசில் நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. எதிா்க் கட்சிகள் குற்றச்சாட்டைத் தொடா்ந்து நாடாளுமன்ற குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

ஒப்பந்தம் பெரும் சா்ச்சையானதைத் தொடா்ந்து, தடுப்பூசியை வழங்குவதற்காக அந்த நாட்டின் இரு நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்து, அதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, பிரோசிலில் மேற்கொள்ளப்பட இருந்த கோவேக்ஸின் மருத்துவப் பரிசோதனையை அந்நாடு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஒப்பந்த ரத்து முடிவைத் தொடா்ந்து, அதன் தடுப்பூசியை பிரேசிலில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்துவதை தற்காலிகமாக ரத்து செய்ய பிரேசில் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com