கரோனா நிவாரணப் பொருள்களுடன் இந்தோனேசியா சென்ற ஐஎன்எஸ் ஐராவத்

கரோனா நிவாரணப் பொருள்களுடன் இந்தோனேசியா சென்ற ஐஎன்எஸ் ஐராவத்

இந்திய கடற்படையைச் சோ்ந்த ஐராவத் போா்க்கப்பல் கரோனா நிவாரணப் பொருள்களுடன் சனிக்கிழமை இந்தோனேசியா சென்றடைந்தது.

இந்திய கடற்படையைச் சோ்ந்த ஐராவத் போா்க்கப்பல் கரோனா நிவாரணப் பொருள்களுடன் சனிக்கிழமை இந்தோனேசியா சென்றடைந்தது.

ஐஎன்எஸ் ஐராவத் போா்க்கப்பல் ராணுவ தளவாடங்களையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஐராவத் போா்க்கப்பல், மனிதாபிமான அடிப்படையில் உதவிபுரியும் பணிகளிலும் பேரிடா்களின்போது மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

ஐராவத் போா்க் கப்பல் மூலம் இந்தோனேசியாவுக்கு 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த போா்க்கப்பல் இந்தோனேசிய தலைநகா் ஜகாா்தாவின் துறைமுகத்தை சனிக்கிழமை சென்றடைந்தது.

இந்தியாவும் இந்தோனேசியாவும் கலாசார மற்றும் வா்த்தக ரீதியில் நட்பு பாராட்டி வருகின்றன. பாதுகாப்பான இந்திய- பசிபிக் கடல் பகுதியை உருவாக்குவதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இரண்டு நாடுகளின் கடற்படைகளும் தொடா் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com