திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் கோபுரத்திற்கு ரூ.32 கோடி செலவில் தங்க முலாம் பூச முடிவு

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் கோபுரத்திற்கு 32 கோடி ரூபாய் செலவில் தங்க முலாம் பூச திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

கோயில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசும் பணி வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. 2022 மே மாதத்திற்குள் இந்த பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 100 கிலோ தங்கம் செலவழிக்கப்பட உள்ளது. 

முன்னதாக, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் தங்க முலாம் பூசும் திட்டம் குறித்து விவாதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே. எஸ். ஜவஹர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர் , 

திருமலையில் உள்ள ஸ்ரீ பூவரா சுவாமி கோயில், திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் ஆகிய கோயில்களின் கோபுரங்களுக்கு தங்க முலாம் பூச 2019 செப்டம்பரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com