உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் தெலங்கானா ராமப்பா கோயில்

தெலங்கானா மாநிலம், வாரங்கல் அருகேயுள்ள ராமப்பா கோயிலை உலக  பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதாக மத்திய கலாசாரத்  துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் தெலங்கானா ராமப்பா கோயில்

தெலங்கானா மாநிலத்தில் வாரங்கல் அருகேயுள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதாக மத்திய கலாசார துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய கலாசார மற்றும் சுற்றுலா துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘தெலங்கானா, வாரங்கல்  அருகே பாலம்பேட்டில் உள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல், ஆதரவுக்காக அவருக்கு நாட்டின் சாா்பில், குறிப்பாக தெலங்கானா மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரையில், ‘அருமை! அனைவருக்கும், குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். உயா்ந்த காகதிய வம்சத்தின் சிறப்பான கைவினைத் திறனை ராமப்பா கோயில் காட்டுகிறது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தைப் பாா்வையிடவும் மகத்தான முதல் அனுபவத்தைப் பெறவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளாா்.

கணபதி தேவா என்ற காகதிய வம்ச மன்னரின் ஆட்சிக் காலத்தில் 13-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட பிரசித்தி பெற்ற இக்கோயிலின் மூலவா் ராமலிங்கேசுவரா். எனினும், இந்த அற்புதமான கோயிலை வடிவமைத்த கட்டடக் கலைஞரான ராமப்பாவின் பெயரால் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. 2019-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம்பெறுவதற்காக மத்திய அரசால் இக்கோயில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

காகதிய வம்சத்தைச் சோ்ந்த மன்னா்கள் இப்போதைய தெலங்கானா, ஆந்திரத்தை உள்ளடக்கிய பெரும்பாலான பகுதிகளையும், கிழக்கு கா்நாடகம், தெற்கு ஒடிசாவின் சில பகுதிகளையும் 12 முதல் 14-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்து வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com