பெகாஸஸ் விவகாரம்: அதிரடி காட்டும் மம்தா

பெகாஸஸ் விவகாரம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் மேற்குவங்க அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
மம்தா
மம்தா

பெகாஸஸ் விவகாரம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் மேற்குவங்க அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

மம்தா பானர்ஜியின் உறவினரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என தி வயர் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகூர், ஜோதிர்மோய் பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் பெகாஸ்ஸ விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மேற்குவங்க அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

என்எஸ்ஒ என்ற இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து பெகாஸஸ் மென்பொருள் வாங்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், உயர்மட்ட அரசு அலுவலர்கள், நீதிபதிகள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் வகையில் முதல்முறையாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுகுறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், "ஹேக்கிங் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தூங்கிக்கொண்டிருக்கும் மற்றவர்களை தட்டி எழுப்ப இது உதவும் என நம்புகிறேன். மேற்குவங்க மக்கள் பலர் ஒட்டு கேட்கப்பட்டுள்ளனர்" என்றார்.

பெகாஸஸ் மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளதாக என்எஸ்ஒ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதனால், நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com