திரிபுரா : கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 105 வயது மூதாட்டி , முதல்வர் வாழ்த்து

பிரம்மஹிரா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 105 வயது மூதாட்டி தாரா கன்யா தெப்பமா கரோனா நோய்த் தடுப்பூசி எடுத்துக்கொண்டதை அறிந்த அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் அம்மூதாட்டியை நேரில் சென்று வாழ்த்தினார்
திரிபுரா : கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 105 வயது மூதாட்டி , முதல்வர் வாழ்த்து
திரிபுரா : கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 105 வயது மூதாட்டி , முதல்வர் வாழ்த்து

திரிபுரா மாநிலம் பிரம்மஹிரா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 105 வயது மூதாட்டி தாரா கன்யா தெப்பமா கரோனா நோய்த் தடுப்பூசி எடுத்துக்கொண்டதை அறிந்த அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப்  அம்மூதாட்டியை நேரில் சென்று வாழ்த்தினார்.

முதியோர்கள் தடுப்பூசி எடுக்க அஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில் எந்தத்  தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி வழங்கப்பட்ட மையத்திற்கே சென்று தடுப்பூசியை போட்டுக்கொண்ட தெப்பம்மாவை அம்மாநில முதல்வர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நேரில் சென்று  சந்தித்தார் .

சந்திப்பின் பின் முதல்வர் ட்விட்டரில் ' தெப்பமாவிடம் மோடியின் புகைப்படத்தைக் காட்டியதும் அவர் அடையாளம் கண்டுகொண்டார். 105 வயது மூதாட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் போது உங்களுக்கு என்ன , அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் " எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அம்மாநில தலைமைச்  செயலர் குமார்  அலோக்   தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெப்பமாவின் வயது 121 எனக் குறிப்பிட்டு இருந்தார். காரணம் , அப்பழங்குடி கிராமத்தில் இருக்கும் தெப்பமாவின் உறவினர்கள் அவருக்கு 121 வயது ஆகிறது என்றும் 105 என்பது வாக்காள அடையாள அட்டையில் இருக்கும் ஆண்டுக் கணக்கு  எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com