கோப்புப்படம்
கோப்புப்படம்

எத்தனை ஐஏஎஸ், ஐபிஎஸ்-களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்? பிகாரில் நீதிமன்றம் அதிரடி

​ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் குழந்தைகள் எத்தனை பேர் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர் என்ற தரவுகளை பிகார் அரசு சேகரித்து வருகிறது.


ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் குழந்தைகள் எத்தனை பேர் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர் என்ற தரவுகளை பிகார் அரசு சேகரித்து வருகிறது.

சிறப்பு ஆசிரியர்களை நீக்குவது குறித்த மனுவை பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில் குமார் உபாதயா விசாரித்தார். விசாரணையின்போது, அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்காத வரை கல்வி அமைப்பில் பெரிய முன்னேற்றங்கள் இருக்காது என நீதிபதி குறிப்பிட்டார். மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட எத்தனை உயர்நிலை அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற தகவல்களை சமர்பிக்குமாறு பிகார் அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த இடைக்கால உத்தரவின்பேரில் தரவுகளை சேகரிக்கும் பணியில் பிகார் அரசு இறங்கியுள்ளது.

பிகாரிலுள்ள 38 மாவட்டங்களிலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட எத்தனை உயர்நிலை அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற தரவுகளை சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சஞ்சய் குமார் அறிவுறுத்தியுள்ளார். ஆகஸ்ட் 4-க்குள் இந்த தரவுகளை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களும் உதவ வேண்டும் எனவும் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். 

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலர் திரிபுராரி சரண் காணொலி வாயிலாக ஆகஸ்ட் 4-இல் ஆலோசனை நடத்துகிறார்.

இதுதொடர்பான தரவுகளை சேகரிப்பது நாட்டில் இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com