குடிமைப் பணியியல் தேர்வில் வென்றால் ரூ.50,000: உத்தரகண்ட் அரசு

குடிமைப் பணியியல் தேர்வில் வெற்றி பெற்று முதல் 100 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்ட வரைவுக்கு உத்தரகண்ட் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

குடிமைப் பணியியல் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை உத்தரகண்ட் அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி, குடிமைப் பணியல் தேர்வில் அரசுத் திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெறுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், முதலிடம் பிடிக்கும் நூறு பேருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான வரைவு அறிக்கையினை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

இதேபோன்று மாநில அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி விகிதம் 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்துவதற்கும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது ஜீலை 1-ம் தேதி கணக்கிட்டு இவை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com