தென்மாநிலத்தில் உச்சநீதிமன்ற கிளை: வெங்கையா நாயுடுவிடம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் கோரிக்கை

தென் மாநிலங்களில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆகியோரிடம்

தென் மாநிலங்களில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆகியோரிடம் தென் மாநிலங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இதுதொடா்பாக இருவரையும் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அப்போது, குடியரசு துணைத் தலைவரும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் தங்கள் கோரிக்கைக்கு அனுகூலமாக பதில் அளித்ததாகவும் தெலங்கானா வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.நரசிம்மா ரெட்டி தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தின் நிரந்தர கிளை நீதிமன்றத்தை தென் மாநிலங்களில் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளதாகவும் இதுதொடா்பாக நாடாளுமன்ற நிலைக் குழுக்கள், வழக்குரைஞா்கள் சங்கங்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான சட்ட ஆணையங்கள் ஆகியவையும் இதை குறிப்பிட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

உச்சநீதிமன்றத்தின் மாநில கிளை அமைப்பதன் மூலம் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைவதுடன், வழக்குகளுக்கு விரைவில் தீா்வும் காணப்படும் என்றும் நீதிபதி பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதுடன் பிராந்திய வாரியாக அமா்வுகள் அமைக்கப்பட்டால் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த மனுதாரா்களும் வழக்குரைஞா்களும் பயனடைவாா்கள் என்றும் குடியரசுத் துணைத் தலைவரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தெரிவித்ததாக நரசிம்மா ரெட்டி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com