தினசரி கரோனா தொற்று குறைந்து வருகிறது

தினசரி கரோனா தொற்று விகிதாசாரம் கடந்த சில வாரங்களாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தகவல் தெரிவித்தார். 
தினசரி கரோனா தொற்று குறைந்து வருகிறது

தினசரி கரோனா தொற்று விகிதாசாரம் கடந்த சில வாரங்களாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தகவல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: மே மாதம் 5-ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தினசரி கரோனா தொற்று சராசரியாக 3,87,029 ஆக இருந்தது. ஜூலை 21ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையில் இந்த எண்ணிக்கை 38,090-ஆகக் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் கரோனா தொற்று குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களில் தினசரி கரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் என 15 லட்சம் பேரிடம் ராணுவ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆய்வில் தடுப்பூசி கோவிஷீல்ட் 93 சதவீதம் பாதுகாப்பைத் தந்திருப்பதையும், 98 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளதையும் கண்டறிந்தனர். 
கடைசி 132 நாள்களுக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,000-ஆகக் குறைந்துள்ளது. கடந்த 124 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 4,00,000-ஆக குறைந்துள்ளது. 
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனா தொற்றுக்கு 29,689 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,14,40,951-ஆக உள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 415 பேர் இறந்துள்ளனர். இதுவரையிலான மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,21,382 ஆகும்.
மொத்த பாதிப்பில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,98,100 பேர். குணமடைந்தோர் விகிதம் 97.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 13,089. தினசரி கரோனா தொற்று விகிதம் 1.73 சதவீதமாக உள்ளது. வார அடிப்படையில் கரோனா தொற்று விகிதம் 2.33 சதவீதமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com