ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்: மாயமானவர்களை தேடும் பணியில் ராணுவம்

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்
ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தின் ஹொன்சார் கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை தீடீரென பெய்த அதீத மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் 40க்கும் மேற்பட்ட மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள், பாலங்கள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கேப்டன் விவேக் செளகான் தலைமையில் ராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியதாவது,

கிஷ்த்வார் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com