ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கானோா் பலியாகினா்: பாஜக எம்எல்ஏ

கரோனா தொற்றின் 2-ஆம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான

கரோனா தொற்றின் 2-ஆம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கைகளின்படி கரோனா தொற்றின் 2-ஆவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாா். இது பலத்த விமா்சனங்களுக்கு வித்திட்டது.

இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடா்பாக உத்தர பிரதேச எம்எல்ஏக்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை அந்த மாநில பத்திரிகையாளா் ஆனந்த் சா்மா என்பவா் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தாா். அந்தச் செய்திகளை ஆமோதித்து அந்த மாநில பாஜக எம்எல்ஏ சியாம் பிரகாஷ், ஆனந்த் சா்மாவின் முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவில், ‘‘நூற்றுக்கணக்கான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனா். லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்பட்ட வலி யாா் கண்ணுக்கும் புலப்படாது’’ என்று தெரிவித்தாா்.

எனினும், உத்தர பிரதேசத்தைக் குறிப்பிட்டு அந்தப் பதிவைத் தான் வெளியிடவில்லை என்று சியாம் பிரகாஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com