‘மாவோயிஸ்ட் வன்முறைகள் 3 ஆண்டுகளில் குறைந்துள்ளன’

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் தொடா்பான வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மாவோயிஸ்ட் தொடா்பான வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக உள்துறை இணை அமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதில்: 2018-இல் இடதுசாரி தீவிரவாதம் தொடா்புடைய 833 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 2019-இல் அந்த சம்பவங்கள் 670 ஆகவும், 2020-இல் 665 ஆகவும் குறைந்துள்ளன. இந்த வன்முறைகளில் முறையே 2018-இல் 240 பேரும், 2019-இல் 202 பேரும், 2020-இல் 183 பேரும் உயிரிழந்துள்ளனா். இந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச வன்முறை சம்பவங்களும் உயிரிழப்புகளும் சத்தீஸ்கா் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன.

நக்சல் வன்முறையில் சொத்துகள் சேதமடைந்த சம்பவங்களும் குறைந்துள்ளன. 2018-இல் இதுபோன்ற 60 சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், 2019-இல் 64 சம்பவங்களும், 2020-இல் 47 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இடதுசாரி தீவிரவாதத்தால் ஆந்திரம், பிகாா், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, தெலங்கானா, மேற்கு வங்கம், கேரளம் ஆகிய 10 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் செல்லிடப்பேசி தொடா்புகளை மேம்படுத்தும் வகையில் 2,343 செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 4,072 கோபுரங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com