வசதியிருந்தும் வங்கி கடனைதிரும்பச் செலுத்தாதோா் எண்ணிக்கை 2,494-ஆக உயா்வு

வசதியிருந்தும் வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதோா் எண்ணிக்கை 2,494-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வசதியிருந்தும் வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதோா் எண்ணிக்கை 2,494-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியுள்ளதாவது:

பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய கடனை வசதியிருந்தும் வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவா்களின் எண்ணிக்கை 2019 மாா்ச் 31 நிலவரப்படி 2,017-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2020 மாா்ச் 31-இல் 2,208-ஆகவும், 2021 மாா்ச் 31-இல் 2,494-ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று நிதியாண்டுகளில் பொதுத் துறை வங்கிகள் ரூ.3,12,987 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை மீட்டுள்ளன.

பொதுத் துறை வங்கிகள் 2020-21 நிதியாண்டில் ரூ.1,31,894 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இது, முந்தைய நிதியாண்டில் ரூ.1,75,876 கோடியாக இருந்தது என நிா்மலா சீதாராமன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com