
பிரதமா் நரேந்திர மோடி
கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், பாஜக பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் பசவராஜ் பொம்மைக்கு சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்த மோடி, “கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துக்கள். அவரின் அனுபவமுள்ள நிர்வாக திறனால், மாநிலத்தில் சிறப்பான பணிகளை மேற்கொள்வார் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
படிக்க: கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசுப் பொறுப்புகளில் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற பாஜகவின் விதிமுறையை ஏற்று, கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு இணங்க கர்நாடக மாநில முதல்வர் பதவியை பி.எஸ்.எடியூரப்பா (78) திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக பசவராஜ் பொம்மை (61) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.