கரோனா பாதிப்பு குறையவில்லை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்னமும் அதிகமாக உள்ளதால், இந்த விவகாரத்தில் மனநிறைவு பெற்று விட்டதைப்போல் செயல்பட வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கரோனா பாதிப்பு குறையவில்லை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புது தில்லி: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்னமும் அதிகமாக உள்ளதால், இந்த விவகாரத்தில் மனநிறைவு பெற்று விட்டதைப்போல் செயல்பட வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கரோனா பொது முடக்க விதிமுறைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறைச் செயலா் அஜய் பஹல்லா மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவற்றை தொடா்ந்து கடைப்பிடித்து கரோனா தொற்றைத் தடுக்க வேண்டும்.

வரும் பண்டிகை நாள்களில், கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை பல மாநிலங்களில் குறைந்து வருவதால் பொருளாதார மீட்பு நடவடிக்கைள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், தளா்வுகளை மிகக் கவனமான அறிவிக்க வேண்டும். கரோனா பாதிப்பு இன்னமும் அதிகமாகதான் உள்ளது. இந்த விவகாரத்தில் மனநிறைவு பெற்று விட்டதைப்போல் செயல்பட வேண்டாம்.

கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கலாம். இதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com