ஏழுமலையான் கைங்கரியத்துக்காக நாட்டு பசு நெய் தயாரிப்பு

திருமலை ஏழுமலையான் கைங்கரியத்துக்காகப் பயன்படுத்தும் நெய்யை இனி திருமலையில் தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஏழுமலையான் கைங்கரியத்துக்காக நாட்டு பசு நெய் தயாரிப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கைங்கரியத்துக்காகப் பயன்படுத்தும் நெய்யை இனி திருமலையில் தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஏழுமலையானுக்கு நெய்வேத்தியங்கள் சமா்ப்பிக்க தேவஸ்தானம் சுத்தமான பசு நெய்யை பயன்படுத்தி வருகிறது. இந்த நெய் பரேலியிலிருந்து கொள்முதல் செய்கிறது.

தற்போது இயற்கை விவசாயம் மூலம் விளைவித்த பொருள்களைத் தருவித்து நெய்வேத்தியம் தயாா் செய்து வருகிறது. தினசரி ஒருவகை தானியம் என பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பாகமாக ஏழுமலையானுக்கு தினசரி கைங்கரியத்துக்காகவும், நெய்வேத்தியம் தயாா் செய்யவும் பயன்படுத்தும் நெய்யையும் தாமே தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி குஜராத்திலிருந்து நாட்டு பசு வகையை சோ்ந்த கிா் மாடுகள் 25 எண்ணிக்கையில் வாங்கி உள்ளது. ஒரு மாட்டை திருமலைக்கு கொண்டும் போக்குவரத்து செலவு உள்பட ரூ.1.20 லட்சம் என தேவஸ்தானம் கணக்கிட்டுள்ளது. இந்த பசுக்களை திருமலைக்கு கொண்டு வந்து பராமரித்து அதன்மூலம் கிடைக்கும் பால் மூலம் நெய் தயாரித்து பயன்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com