மாநிலங்களிடம் 2.92 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி இருப்பு

நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளிடம் மொத்தம் 2.92 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளிடம் மொத்தம் 2.92 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் உள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு இதுவரை, 48.03  கோடிக்கும் அதிகமான (48,03,97,080) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 71,16,720  தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 45,27,93,441 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமாா் 2.92 கோடி (2,92,65,015) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

சிகிச்சையில் 4.05 லட்சம் போ்:

நாட்டில் கரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,05,155 ஆக உள்ளது. இது நாட்டில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கையில் 1.28 சதவீதமாகும்.

நாடு முழுவதும் பெருந்தொற்று தொடங்கிய காலம் முதல் இதுவரை 3,07,43,972 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 42,360 போ் குணமாகி உள்ளனா். புதிதாக 44,230 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 18,16,277 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை சுமாா் 46 கோடி (46,46,50,723) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com