ட்ரோன் தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை

ட்ரோன் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரோன் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகின்றனர்.

ஜம்மு விமானப் படைத் தளத்தில் நிகழ்த்தப்பட்ட ட்ரோன் (சிறிய ஆளில்லா விமானம்) தாக்குதல் தொடர்பாக மாநிலத்தில் 14 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது. 

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தூண்டிதலின் பெயரில் லஷ்கர்-இ-முஸ்தபா இந்த ட்ரோன் தாக்குலை நடத்தியதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 27ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீா் விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் எல்லை பகுதியிலிருந்து 14 கிமீ தொலைவில் இந்த விமானப்படை தளம் அமைந்துள்ளது. இந்திய விமான படையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரில் சோபியன், அனந்த்நாக், பனிஹால் பகுதி்களிலும் ஜம்முவில் சுஞ்சவன் பகுதியிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது. பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

தாக்குதல் சம்பவம் குறித்து விமானப்படை அதிகாரிகளிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விவரங்களைக் கேட்டறிந்ததாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் விமானப்படை தளபதி விக்ரம் சிங் நேரில் ஆய்வு செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com