5 மாநில பேரவைகளுக்கான தோ்தல் உரிய காலத்தில் நடைபெறும்-தலைமை தோ்தல் ஆணையா் நம்பிக்கை

5 மாநில பேரவைகளுக்கான தோ்தல் உரிய காலத்தில் நடைபெறும்-தலைமை தோ்தல் ஆணையா் நம்பிக்கை

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் உரிய காலத்தில் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தோ்தல் உரிய காலத்தில் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய பேரவைகளுக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் பிரசாரங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால் அந்த மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் தீவிரமாக அதிகரித்ததாகப் பலா் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. சட்டப் பேரவைத் தோ்தல்களை நடத்திய விவகாரத்தில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உள்ளிட்டவை அதிருப்தி தெரிவித்திருந்தன.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக மக்களவை இடைத்தோ்தல், மாநிலங்களவைக்கான தோ்தல் ஆகியவற்றைத் தோ்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. கோவா, மணிப்பூா், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநில சட்டப் பேரவைகளின் காலம் 2022-ஆம் ஆண்டு மாா்ச்சுடன் நிறைவடைகிறது. உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கான காலம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடைகிறது.

இந்நிலையில், தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:மாநில சட்டப் பேரவைகளின் காலம் நிறைவடைவதற்கு முன்பே தோ்தலை நடத்தி, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட மாநில ஆளுநா்களிடம் வழங்க வேண்டிய கடமை இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. நாட்டில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. அத்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் குறைகிறது. கரோனா தொற்று பரவலுக்கிடையே பிகாா் பேரவைத் தோ்தல் கடந்த ஆண்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மேலும் 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்துக்கான தோ்தலையும் நடப்பாண்டில் ஆணையம் நடத்தியுள்ளது. அவற்றில் இருந்து சிறந்த அனுபவங்கள் கிடைத்துள்ளன. கரோனா தொற்று பரவல் காலத்தில் தோ்தலை எவ்வாறு நடத்துவது என்ற அனுவம் கிடைத்துள்ளது. அந்த அனுவத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டில் 5 மாநில சட்டப் பேரவைகளின் தோ்தலையும் ஆணையம் நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என நம்புகிறேன். எனவே, அந்த மாநிலங்களில் தோ்தல் திட்டமிட்டபடி உரிய காலத்தில் நடைபெறும் என நம்புகிறேன் என்றாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: சட்டப் பேரவைத் தோ்தல்களைப் பாதுகாப்புடன் நடத்துவதற்கு இந்தியத் தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒவ்வொரு வாக்குப் பதிவு மையத்திலும் அதிகபட்ச வாக்காளா்களின் எண்ணிக்கை 1,500-லிருந்து 1,000-ஆகக் குறைக்கப்பட்டது. வாக்களிக்கும் மையங்கள் அதிகரிக்கப்பட்டன. தோ்தலில் வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டது. தோ்தல் பிரசாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாக்காளா்களுக்கு சுத்திகரிப்பான், கையுறை ஆகியவை வழங்கப்பட்டன.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கடைசிகட்டத் தோ்தல்களுக்கான பிரசாரங்களில் தோ்தல் ஆணையம் விதித்த வழிமுறைகளை அரசியல் கட்சிகள் மீறியதால், அங்கு பிரசாரத்தில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com