கேரள தொழில்துறை அமைச்சருக்கு கரோனா

கேரள தொழில்துறை அமைச்சா் பி.ராஜீவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கேரள தொழில்துறை அமைச்சா் பி.ராஜீவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களும் எடுத்துக் கொண்ட அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை காலை உறுதி செய்யப்பட்டதாகவும், இதையடுத்து அவா் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அமைச்சா் பி.ராஜீவ், ‘எனக்கு சளியின் தாக்கம் இருப்பதாக திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்க வேண்டியிருப்பதால் முன்னெச்சரிக்கையாக கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. கடந்த சில நாள்கள் என்னோடு தொடா்பில் இருந்தவா்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதில் கூறியுள்ளாா்.

எா்ணாகுளம் மாவட்டம் கலமசேரி பேரவைத் தொகுதி உறுப்பினராக பி.ராஜீவ் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com