பாகிஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாக 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

புதன்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 1,843 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 9,24,667 ஆக உயர்ந்துள்ளது. 

இதையடுத்து, நாட்டில் கரோனா நேர்மறை விகிதம் 3.9 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக 5 சதவீதத்திற்கும் குறைவான நேர்மறை விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. 

தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) வழங்கிய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 47,183 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 1,843 நேர்மறையாக உள்ளது. மேலும் 80 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 20,930 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பலி எண்ணிக்கை 12வது நாளாக 100-க்கு கீழே குறைந்துள்ளது. 

தற்போது சிகிச்சையில் 55,052 ஆக உள்ளது, இதுவரை சுமார் 8,48,685 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com