‘கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத் தன்மை அவசியம்’:அகிலேஷ் யாதவ்

கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
‘கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத் தன்மை அவசியம்’:

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக புதன்கிழமை பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மையின் அவசியம் குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த தரவுகளை அரசாங்கம் ஏன் பகிரங்கமாக வெளியிடவில்லை? என அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

கரோனா தடுப்பூசியின் வெளிப்படையான தரவுகளை மத்திய அரசு பகிர்வதன் மூலமே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com