மத்திய அரசு சூழ்ச்சி; தில்லியை விட்டு வெளியேறமாட்டோம்: விவசாயிகள்

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் தில்லியை விட்டு வெளியேறமாட்டார்கள் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் போராடி வருகின்றனர். கடும் குளிர், வெயில், கரோனா தொற்றுக்கு இடையிலும் 6 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் வியாழக்கிழமை விவசாயிகள் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், மத்திய அரசு இந்த போராட்டத்தை தில்லியில் இருந்து ஹரியாணாவுக்கு மாற்ற முயற்சிக்கிறது. ஆனால் இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அரசு அதனுடைய சூழ்ச்சியில் வெற்றிபெற விடமாட்டோம். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் தில்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com