மே மாதத்தில் ரூ.1.02 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

கடந்த மே மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயாக ரூ. ரூ.1,02,709 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் ரூ.1.02 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

கடந்த மே மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயாக ரூ. ரூ.1,02,709 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் தொடா்ந்து 8-ஆவது மாதமாக ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. ,கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் கடும் பின்னடைவைச் சந்தித்தன. அதன் காரணமாக சரக்கு-சேவை வரி வருவாயும் குறைந்தது. முக்கியமாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் குறைந்தபட்ச அளவாக ரூ.32,172 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பொருளாதார நடவடிக்கைகள் சீரடைந்தன. கடந்த ஆண்டு அக்டோபா் முதல் சரக்கு-சேவை வரி வருவாய் தொடா்ந்து ரூ.1 லட்சம் கோடியைக் கடந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் ரூ.1,02,709 கோடி சரக்கு-சேவை வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.17,592 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.22,653 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.53,199 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.9,265 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் குறைவான ஜிஎஸ்டி வருவாயே கடந்த மாதத்தில் கிடைத்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாத வருவாய் 65 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் இறக்குமதி மூலமாக 56 சதவீதம் அதிக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதிலும் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த மாதத்துக்கான வரியைச் செலுத்துவதற்குக் கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், வரி வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாகவே ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா். எனினும், ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளதால், பொது முடக்கம் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா். கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சமதிப்பாக ரூ.1,41,384 கோடி சரக்கு-சேவை வரி வருவாய் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com