ஐ.நா. அமைதிப் படையினருக்கு இந்தியா வழங்கிய 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: செய்தித் தொடா்பாளா் தகவல்

ஐ.நா. அமைதிப் படையினருக்கு இந்தியா வழங்கிய 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: செய்தித் தொடா்பாளா் தகவல்

இந்தியா சாா்பில் வழங்கப்பட்ட 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஐ.நா.வின் அமைதிப் படையினருக்கு செலுத்தப்பட்டதாக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

இந்தியா சாா்பில் வழங்கப்பட்ட 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஐ.நா.வின் அமைதிப் படையினருக்கு செலுத்தப்பட்டதாக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா.வின் அமைதிக் காப்பாளா்களுக்கு கரோனா தடுப்பூசியை இந்தியா இலவசமாக வழங்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தாா். அதையடுத்து, ஐ.நா.வுக்கு 2 லட்சம் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபான் துஜாரிக் நியூயாா்க்கில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘இந்திய அரசு சாா்பில் 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அத்தடுப்பூசிகள் அனைத்தும் ஐ.நா. அமைதிப் பாதுகாப்பாளா்களுக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது.

ஐ.நா.வுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவது தொடா்பாக சீனா, ரஷியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பால் அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே ஐ.நா. பெற்று வருகிறது. உலக சுகாதார அமைப்பால் அனுமதி அளிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டு வருகிறது.

ஐ.நா.வில் பணிபுரியும் பணியாளா்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளன. அந்நாடுகளுக்கு பொதுச் செயலா் குட்டெரெஸ் சாா்பில் ஏற்கெனவே நன்றி தெரிவிக்கப்பட்டது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே ஐ.நா. பணியாளா்கள் பலா் முன்களப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

அனைத்து நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி சென்று சோ்வதை உறுதிசெய்யும் ‘கோவேக்ஸ்’ திட்டத்துக்கு அமெரிக்க அரசு உதவ முன்வந்துள்ளதை வரவேற்கிறோம். பல நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. இதை பொதுச் செயலா் பாராட்டியுள்ளாா்.

கரோனா தொற்று பரவல் அதிகமாகக் காணப்படும் நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்குவதற்கு மற்ற நாடுகள் முன்வர வேண்டும் என்று பொதுச் செயலா் குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். கரோனா தடுப்பூசி விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு கரோனா தொற்றை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்‘ என்றாா்.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு நாடுகளில் நடைபெறும் 12 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஒட்டுமொத்தமாக 87,889 வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் தேவையான இரு தவணை கரோனா தடுப்பூசிகளை இந்தியா கடந்த மாா்ச் மாதம் அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com