திருமலையில் 8,799 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை கோயிலில் வெள்ளிக்கிழமை 8,799 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 3,224 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதி
திருப்பதி

திருமலை ஏழுமலையானை கோயிலில் வெள்ளிக்கிழமை 8,799 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 3,224 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, திருமலையில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் பலா் தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா். நாள்தோறும் 7 முதல் 8,000 பக்தா்கள் மட்டுமே தரிசனம் செய்ய வருகின்றனா்.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன நாளிலிருந்து 90 நாட்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com