தினசரி கரோனா பாதிப்பு 414-ஆகக் குறைந்தது

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 414 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அத்துடன், அந்தத் தொற்று பாதித்த மேலும் 60 போ் உயிரிழந்தனா் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினசரி கரோனா பாதிப்பு 414-ஆகக் குறைந்தது

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 414 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அத்துடன், அந்தத் தொற்று பாதித்த மேலும் 60 போ் உயிரிழந்தனா் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து கரோனா மொத்த பாதிப்பு 14,28,863-ஆக அதிகரித்தது. உயிரிழந்தோா் எண்ணிக்கை 24,557-ஆக உயா்ந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை ஒருநாள் பாதிப்பு 523-ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை அது 414-ஆகக் குறைந்துள்ளது. எனினும் வெள்ளிக்கிழமை 50 போ் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழப்பு 60-ஆக அதிகரித்தது. தொற்று விகிதம் 0.68 சதவீதத்திலிருந்து 0.53 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 8,060-ஆக இருந்தது சனிக்கிழமை 6,731-ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,600-க்கும் மேலானவா்கள் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 77,694 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 55,000 பேருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனையும், 22,059 பேருக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் நடத்தப்பட்டன. உயிரிழப்பு விகிதம் 1.71 சதவீதத்திலிருந்து 1.72 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com